ஈரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் முயற்சியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு எதிரான தாக்குதலையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் “ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து
இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்கள்மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை ஈரான் நடத்தலாம்” என கூறியுள்ளார்.
எனவே இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் இராணுவ தலைமையகம் என்பவற்றைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது.
தெஹ்ரானின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறும் விமானங்களையும் ஈரான் நிறுத்திவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com
