எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.
இந்த தகவலை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம் ஆலம் மன்னாரில் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சருக்கும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சர் குறித்த விடயங்களை குறிப்பிட்டதாக ஆலம் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com
