ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்றையதினம் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்களின்) பிரதிநிதிகளின் சந்திப்பில் கலந்துகொள்ளகிறார்.
அதன் பின்னர், ஜனாதிபதி ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டிலும் கலந்து கொள்வார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் இன்று இடம்பெறவுள்ளது.
பின்னர், ஜனாதிபதி ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
Link: https://namathulk.com
