மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உற்பத்திச் செலவில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், தற்போது பேக்கரி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்றும்,
அத்தகைய விலைகளை அதிகரிக்க வேண்டாம் என்று பேக்கரி உரிமையாளர்களிடம் அவர் கேட்டுக் கொள்வதாகவுதம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com
