யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று நடைபெற்றது.
இதன்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மதிவதனி 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
ஆதரவாக 19 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்ரீ கிருஷ்ணகுமார் 16 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
Link: https://namathulk.com
