இலங்கையில் தற்போது உள்ள இஸ்ரேலிய சேவையாளர்களுக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
தற்போதைய இராணுவ சூழ்நிலை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டதால், திட்டமிடப்பட்ட திகதிகளில் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாவிட்டால், அவர்கள் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் மறு நுழைவு விசா காலாவதியானால், அவர்கள் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாது என்பதால், இன்றைக்குள் அது குறித்து தூதரகத்திற்குத் தெரிவிக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா கோரியுள்ளார்.
மறு நுழைவு விசா காலத்தை நீட்டிப்பது குறித்து இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
எனவே, தற்போது நாட்டில் உள்ள இஸ்ரேல் செல்ல காத்திருக்கும் பணியாளர்கள் தொடர்புடைய விபரங்களை இன்று பின்வரும் தொலைபேசி எண்களுக்கு வட்ஸ்சப் மூலம் அனுப்புமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுர் மேலும் அறிவித்துள்ளார்.
071-844 7305, 071-683 3513 அல்லது 071-974 2095
