நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் பொதுமக்கள் அசெகரியங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, களுகங்கை, மாகுறு கங்கை மற்றும் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், குறித்த கங்கைகளை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டின் சில பகுதிகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் அயகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 97 குடும்பங்களைச் சேர்ந்த 353 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
Link: https://namathulk.com
