வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலதிக நேரக் கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் உடனடியாக வெளியிடப்படாவிட்டால், ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட காலமாக மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பான திருத்தங்களை அரசாங்கத்திடம் கோரி வருகின்றோம்.
இந்த கொடுப்பனவு, வைத்தியர்கள் மேற்கொள்ளும் மேலதிக பணிச்சுமைக்கு ஈடாக வழங்கப்படும் நிதி உதவியாகும்.
எனினும், இதற்கான சுற்றறிக்கைகள் இதுவரை உரிய முறையில் வெளியிடப்படவில்லை என அந்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது
Link: https://namathulk.com
