வரி குறைப்பு தொடர்பில் IMF இன் நிலைப்பாடு

Aarani Editor
1 Min Read
IMF vs Sri Lanka

இந்த ஆண்டு விதிக்கப்பட்ட வரிகளில் எந்தக் குறைப்பையும் செய்ய வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணங்களில் 15% அதிகரிப்பு மற்றும் தொடர்புடைய அரசாங்க வருவாய் இலக்குகளை அடைவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு நடத்திய மூன்றாவது மதிப்பாய்வு பெப்ரவரி 28 ஆம் திகதி நிறைவடைந்தது.

அதன்படி, இலங்கைக்கு நான்காவது கடன் தவணையாக 334 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்தது.

இந்தக் கடன் வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்க மேல் நிதி உதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *