செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அதனை விரட்டியடிக்க வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அரசாங்கம் சரியாக செயற்படாத நிலையில் அதனை விரட்டியடிப்பது பிரஜைகளின் கடமை எனவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்புகளில் ஒன்றாகும்.
அதனை பொதுமக்கள் விட்டுகொடுத்துவிடக் கூடாது எனவும் சபாநாயகர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
Link: https://namathulk.com
