யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களில், ஒருவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயினும், மற்றையவரிடமிருந்து ஆயிரம் மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Link: https://namathulk.com
