முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீப் பரவல் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
காற்றின் வேகத்தினால் தீப் பரவல் அதிகரித்துள்ளதாகவும் தீச் சுவாலைகள் நீண்ட தூரம் காற்றினால் வீசப்படக்கூடும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று வீசுவதானால் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படைப் பிரிவு இல்லாமையினால் உடனடி நடவடிக்கையாக படையினரின் உதவியை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நாடியுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
