ஈரானுடனான மோதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் மீதான அண்மைய தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதர் உறுதிப்படுத்தினார்.
இன்று காலை 5.00 மணி நிலவரப்படி, காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எதிர்வரும் நாட்களில் அவர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலும் இரண்டு இலங்கையர்கள் தற்காலிகமாக அவர்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஈரானால் நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நேற்று மதியம் தொடங்கி இரவு முழுவதும் தொடர்ந்ததாகத் தெரிவித்தார்.
இவற்றில் பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டாலும், டெல் அவிவ், ஹைஃபா மற்றும் ஜெருசலேம் உட்பட அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
