பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்திருந்நதனர்.
சபையில், எதிர்க்கட்சி சார்பில் 5 தமிழ் உறுப்பினர்கள் மாத்திரமே உள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இதன்போது, ஜனாதிபதி சபைக்கு வந்த நிலையில், இன்று நாங்கள் மாத்திரமே உள்ளோம் என சாணக்கியன் தெரிவித்தார்.
அத்துடன், நாங்களும் வெளிநடப்பு செய்திருந்தால் உங்களுக்கு விவாதத்தை நடத்த முடியாது போயிருக்கும் என சாணக்கியன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும் நியாயமானதுமான விசாரணை நடைபெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
