பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார்.
இந்த மாதம் 30ஆம் திகதி முதல் வாகனங்களின் இயக்கத்தில் 85 பாதுகாப்பு முன்மொழிவு முறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விடணம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
தனியார் பஸ்களை இயக்கும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஏதாவது ஒரு சமூக பாதுகாப்பு முறைமைக்குள் கொண்டுவர வேண்டும்.
அந்த முறைமை மூலம் 55 வயதை அடையும் போது ஓய்வூதியம் பெறக்கூடிய ஒரு முறைமைக்கு செல்ல வேண்டும்.
அவ்வாறு செய்தால் ஒரு வருடத்திற்குள் நாம் அந்த இலக்கை அடைய முடியும்.
அதேபோல், பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதை கட்டாயமாக்குகிறோம், இதன்மூலம் பஸ் உரிமையாளர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என வலியுறுத்தினார்
Link: https://namathulk.com
