ஈரானின் தெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரகத்தை தற்காலிகமாக இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாகக் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய வேறு இடத்திலிருந்து அதன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக, நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும்இ,அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com
