மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு இலங்கை போக்கவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது, ராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்ட நிலையில், குறித்த சிப்பாயை முருங்கன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில், பாடசாலை மாணவி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் முருங்கன் பொலிஸார் இராணுவ சிப்பாயியை கைது செய்துள்ளனர்.
அத்துடன், மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Link: https://namathulk.com
