இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13 ஆம் திகதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
அணுசக்தி மையங்களையும், இராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடியாக தாக்குதலில் ஈடுபட்டது.
இந்நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அமெரிக்காவை தாக்குவதாக எச்சரித்து, சரணடையுமாறு டிரம்பின் அழைப்பை நிராகரித்த பின்னர், ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் முடிவை அமெரிக்கா நெருங்கி வருகிறதா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ‘நான் அதைச் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை’ என தெரிவித்தார்.
Link: https://namathulk.com
