வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க கூறினார்.
இதன்படி, சுமார் 58,947 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூடுதலாக 7,500 கார்கள் மற்றும் 1,666 முச்சக்கரவண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் நடந்ததாக கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com
