கலிபோர்னியாவில் தேசிய படைகளை குவித்த ஜனாதிபதி ட்ரம்பின் முடிவுக்கு அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை, அவரவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, அதிகளவிலான மெக்சிக்கோ நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
இதனிடையே, ட்ரம்பின் நடவடிக்கையை கண்டித்து கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.
இதையடுத்து, மெக்சிக்கோ, தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த தேசிய படையைச் சேர்ந்த 4,000 வீரர்களை லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ட்ரம்ப் அனுப்பி வைத்தார்.
இதனால், கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசம் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றத்தில் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி, கலிபோர்னியா ஆளுநரை கலந்தாலோசிக்காமல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் செயல்பட்டிருப்பது சட்டவிரோதம் என கூறி, தேசிய படைகளை குவித்த உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, லொஸ் ஏஞ்சலில் தேசிய படைகளை குவிக்கும் உத்தரவுக்கு அனுமதியளித்துள்ளார்.
உள்நாட்டு கலவரத்தை கட்டுப்படுத்த கூட்டாட்சி அதிகாரத்தை ட்ரம்ப் பயன்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
Link: https://namathulk.com
