திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடலில் முதன்முறையாக ஒரு தனித்துவமான நீருக்கடியில் தமிழ் மற்றும் சிங்கள புதுவருட விழா கொண்டாடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் மலிமா விருந்தோம்பல் சேவைகள் (MHS) மலிமா சுழியோடிகள் சங்கம் , கடற்படை சுழியோடிகள் பிரிவுடன் இணைந்து கடல் நீருக்கு அடியில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், இலங்கையின் அழகிய நீரின் திறனை ஒரு முதன்மை இடமாக எடுத்துக்காட்டுவதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளும், விளையாட்டுக்களும் சுழியோடிகளால் நிகழ்த்தப்பட்டு புதுவருடம் கொண்டாடப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
