இலங்கையின் வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட 350 மெகாவாட் ஒருங்கிணைந்த சுழற்சி வசதியான சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்கான மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது.
சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையம் சஹஸ்தனவி லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமை இலங்கை மின்சார சபை வசமாகும்.
திறந்த சுழற்சி செயல்பாட்டின் கீழ் 30 மாதங்களில் தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதில் இலங்கையின் முயற்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 350 மெகாவாட் சஹஸ்தனவி கூட்டு சுழற்சி மின் உற்பத்தி நிலையம் விரைவில் கட்டுமானத்தைத் ஆரம்பிக்கவுள்ளது.
2028 ஆம் ஆண்டுக்குள், சஹஸ்தனவி மற்றும் இதே போன்ற ஆலைகள் டீசலில் இருந்து இயற்கை எரிவாயு திட்டத்திற்கு முழுமையாக மாறும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் ஊடாக எரிபொருள் செலவுகளை 50% குறைக்க முடியும் என நம்பப்படுகிறது
Link: https://namathulk.com/