அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராகத் தனித்தனியாகப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்குப் பதிலாகச் சர்வதேச ரீதியிலான பதிலளிப்புக்கு இலங்கை செல்ல வேண்டும் என வெரிட்டே ரிசேர்ச் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக உலகளாவிய தரப்புடன் இணைந்து பொதுவான பதிலை உருவாக்க வேண்டும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பானது, உலக வர்த்தக ஸ்தாபனத்தின் விதிகளிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக ஸ்தாபனத்தில் 166 நாடுகள் அங்கம் வகிக்கின்ற நிலையில் அந்த நாடுகள் சுமார் 98 சதவீத சர்வதேச வர்த்தகத்தை உள்ளடக்கியுள்ளன.
தற்போது நாடுகள் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்ற போதிலும் சகல தரப்பும் இணைந்து பலதரப்பு அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என வெரிட்டே ரிசேர்ச் தெரிவித்துள்ளது.
link: https://namathulk.com/
