இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 26ஆவது போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் குஜராத் டைடன்ஸ் அணியின் சார்பில் சுப்மன் கில் 60 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தநிலையில் 181 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சார்பில் நிக்கோலஸ் பூரன் 61 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய புள்ளிப்பட்டியலில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/