தேவேந்திர முனை இரட்டைக் கொலை – சந்தேக நபர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்.

Aarani Editor
1 Min Read
Double Murder

தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்பாக, சிங்காசன வீதியில் கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு, தேவேந்திரமுனை பெரஹரா காவடி நடனத்தின்போது ஏற்பட்ட மோதல்தான் காரணமென சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு, வேன் ஒன்றில் வந்த குழுவினர், இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் ‘தெஹிபாலே மல்லி’ என்று அழைக்கப்படும் தேவேந்திர முனை பகுதியைச் சேர்ந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பிரதான சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனிதப் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு தடுத்து வைத்து விசாரணை செய்து வருகிறது.

இவர்களில் ஒருவர் கொலையாளிகள் வந்த வாகனத்தின் சாரதியாகவும், மற்றவர் துப்பாக்கிதாரியாவார்.

விசாரணையின்போது சந்தேக நபர்கள், தம்மை உள்ளடக்கிய நான்கு பேர் இந்த கொலைக்காக வந்ததாகவும், அதில் கொழும்பிலிருந்து வந்த இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் தொடர்பில் எந்த தகவலும் தமக்குத் தெரியாது என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த கொலைக்காக எந்த பணமும் பெறவில்லை எனவும், நட்பு உறவின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *