மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா யுலேக்கா முரளிதரனின், கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் சுய தொழில் முயற்சியாளர்களின் ‘பாடுமீன் சந்தை’ விற்பனைக் கண்காட்சி நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.
மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானது சுய தொழில் முயற்சியாளர்களது மேம்பாடு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஒரு வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் திறம்பட சேவையாற்றி வருகின்றது.
சம்மேளனத்தின் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக மாவட்டத்தில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பு மிகவும் அரிதாக காணப்படுவதனை கருத்திற் கொண்டு சுயதொழில் முயற்சியாளர்களிற்கு நிரந்தர சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக கல்லடி பழைய காலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கல்லடி பிறிஜ் மார்க்கெட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூரணை தினங்களில் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மாலை நேர ‘பாடு மீன்’ விற்பனைச் சந்தையினை தொடர்ச்சியாக நடத்துவதற்கு திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்தும் வண்ணமே குறித்த சந்தை நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
link: https://namathulk.com/
