தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (14) காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் கௌனிகம மற்றும் தொடங்கொட சந்திப்புகளுக்கு அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பண்டிகைக் காலத்தில் வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக செயற்படுமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி, போக்குவரத்து விதிகளுக்கு அமைய வாகனங்களை செலுத்துமாறும், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, புத்தாண்டை முன்னிட்டு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
link: https://namathulk.com/