திருகோணமலை – கந்தளாய் அக்போபுர பிரதேசத்தில், தனியார் பஸ் வண்டி இராணுவத்தின் பார ஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி, ஏற்பட்ட விபத்தில், ஒருவர் பலியான அதேவேளை, 27 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த கோர விபத்து கந்தளாய் பிரதேசத்தில், அக்போபுர பொலீஸ் பிரிவுக்குட்பட்ட 86வது மைல் கல்லில், இன்று காலை இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
பஸ் வண்டியில் பயணித்த, 25 வயதான மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, முகமட் அஸ்கர் முகமட் அர்சாத் என்பவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த 27 பயணிகளும் கந்தளாய் மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
link: https://namathulk.com/