தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று உடலியல் நிபுணர் வைத்தியர் நந்தன திக்மதுகொட தெரிவித்தார்.
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் இருப்பதாக உடலியல் நிபுணர் வைத்தியர் நந்தன திக்மதுகொட கூறினார்.
நீண்டகால நோய்கள் உள்ளவர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டிய நிபுணர், சாதாரண மக்களும் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வெளியே செல்லும் போது, வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு குடை அல்லது சிறப்பு ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும் என உடலியல் நிபுணர் வலியுறுத்தினார்.
கஞ்சி, சூப், தேநீர் மற்றும் ஜீவானி போன்ற தாதுக்கள் நிறைந்த ஆகாரங்களை உட்கொள்வது மிக அவசியம் எனவும் உடலியல் நிபுணர் சுட்டிக்காட்டினார்.
link: https://namathulk.com/