அண்மையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் தமது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து இசைஞானி இளையராஜா குறித்த படத் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சட்டக் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் இந்திய மதிப்பில் 5 கோடி ரூபா இழப்பீடு கோரியுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் திரைப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ ஆகிய 3 பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் குறித்த படத்தில் இந்த 3 பாடல்களைப் பயன்படுத்தியதற்காக தமக்கு இழப்பீடாக இந்தி மதிப்பில் ரூபாய் 5 கோடியை இளையராஜா கோரியுள்ளார்.
அத்துடன் 3 பாடல்களையும் படத்தில் உடனடியாக நீக்க வேண்டும் எனவும்
7 நாட்களுக்குள் படக்குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறித்த சட்டக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com/
