யாழ்ப்பாணத்திற்கு இன்று ஜனாதிபதி விஜயம் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Aarani Editor
0 Min Read
Anura Kumara

யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் (17) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் நோக்கிலேயே ஜனாதிபதியின் வருகை அமைந்துள்ளது.

இதற்கமைய நல்லூர் – கிட்டுப்பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *