தெற்கு அதிவேக வீதியில் சிறுவன் ஒருவர் வாகனம் செலுத்தும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுவன், சாரதியின் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை செலுத்துவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
அந்த காணொளியை, அதே வீதியில் பயணித்த மற்றுமொரு சாரதி ஒருவர் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், அதிவேக வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்ற இடம் தெரியவராத நிலையில், இது தொடர்பில் சமூக ஆர்வளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Link: https://namathulk.com/
