தலைமன்னார் மற்றும் இந்தியாவை பிரிக்கும் பாக்கு நீரினை பகுதியில் காணப்படும் இலங்கைக்கு சொந்தமான 6 மணல் திட்டுக்களை பார்ப்பதற்கான அனுமதி நீண்டகாலங்களாக மறுக்கப்பட்ட நிலையில் சுற்றுலா துறையை விருத்தி செய்யும் முகமாக குறித்த மணல் திட்டுக்களை பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கிடைக்க பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
படகு போக்குவரத்து செய்ய கூடிய முதலீட்டாளர்களை பெற்று கொள்வதில் காணப்பட்ட தாமதம் காரணமாக இத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
எனினும் வருகின்ற 22 ஆம் திகதி அணைத்து பங்குதாரர்கள், விசேடமாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச சபை மற்றும் முதலீட்டாளர்களுடன், இணைந்து ஒரு கூட்டத்தை ஒழுங்கமைத்துள்ளதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்pபட்டார்.
அதன் பின்னர் குறித்த 6 மணல் திட்டுக்களையும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மிக விரைவில் இடம்பெற உள்ளதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.
Link: https://namathulk.com/
