கொழும்புக்கு செல்ல நானுஓயாவில் குவியும் பயணிகள்.

Aarani Editor
1 Min Read
NanuOya Station

சித்திரை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி செல்வதற்கு இன்று முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று காலை பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்பட்ட ரயிலுக்கு ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.

எனினும் வருகை தந்த ரயிலில் அனைவருக்கும் இடவசதி இல்லாமல் ஏராளமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் தொழில் நிமிர்த்தம் கொழும்பு திரும்பும் பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனால், நானுஓயா புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்வதற்கு அதிகமான பயணிகள் வருகைத்தருவதால் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அதிக பயணிகள் நானுஓயாவிக்கு வருகை தருவதன் காரணமாக புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் புகையிரத மிதிபலகையில் நின்றவாறு பயணம் செய்தமையை அவதானிக்க முடிந்தது.

நுவரெலியா மற்றும் நானுஓயா உள்ளிட்ட சுற்றுலா பிரதேசங்களில் இருந்து பதுளை எல்ல பகுதியை நோக்கி செல்லதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நானுஓயா புகையிரத நிலையத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *