முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிசார்.

Aarani Editor
1 Min Read
இளவாலை

பணம் களவாடப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிசார் அந்த முறைப்பாட்டை பதிவு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் குற்றஞ் சாட்டினார்.

கடந்த 10ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டது, இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்றபோது, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட பொலிசார் அது இளவாலை பொலிஸ் பிரிவுக்குள் வரும் என தெரிவித்துள்ளனர்.

ஆகையால் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு பி.ப 3.00 மணியளவில் சென்ற முறைப்பாட்டாளர்களை, 6.00 மணிவரை காத்திருந்தனர்.

பணம் தொலைந்தது தொடர்பாக இதுவரை முறைப்பாடு பதிவு செய்யவும் இல்லை, பணத்தை கண்டுபிடித்து கொடுப்பதற்கு பொலிசார் முயற்சிக்கவும் இல்லை என குறித்த இளைஞன் தெரிவித்தார்.

இளவாலை பொலிஸாரின் இவ்வாறான முறைகேடான செயற்பாடுகள் அண்மை காலமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *