காலியில் உணவகமொன்றுக்கு சென்ற தமிழ் குடும்பத்தினர் மீது , உணவக ஊழியர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
நேற்றிரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
இதன்போது காயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிரேன்பாஸ் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற தமிழ் குடும்பம் மீதே காலியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவு முன்பதிவு செய்து , மிக நீண்ட நேர காத்திருப்பின் பின்னர் சமையலறை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுயள்ளது.
உணவகத்தின் காசாளருக்கும் , ஊழியருக்கும் இது தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பின்னர், உணவு முன்பதிவு செய்தவர்களுடன் தகராறாக வலுப்பெற்றுள்ளது.
Link: https://namathulk.com
