சீனாவின் இணையத்தள விற்பனை நிறுவனங்களான ஷீன் மற்றும் தெமு ஆகிய நிறுவனங்கள் பொருட்களின் விலையை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பானது அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை அறிவித்ததன் பின்னரே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்காகச் சீனா தற்போது 245 சதவீத வரியினை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
