யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் நேற்றையதினம் (17) மீட்கப்பட்டது.
புத்தாண்டை கொண்டாடும் முகமாக தனது நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி குறித்த இளைஞன் உயிரிழந்தார்.
தாமரை கொடியில் சிக்குண்ட நிலையில் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த அவரது காதலி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
வரணி பகுதியைச் சேர்ந்த 18 வயதான குறித்த பெண் இன்று (18) அதிகாலை இவ்வாறு உயிரிழந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதணைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com/
