தீர்க்கப்படாத பிரச்சணைகள் தொடர்பில் நாளாந்தம் 1000 முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெறுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அவற்றில் 900 முறைப்பாடுகள் கிராம மட்டத்தில் இருந்து கிடைக்கப்பெறுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நேற்றையதினம் கொலன்னாவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் நகர சபைகள் முறையாக நிறுவப்பட்டால், அத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் கூறினார்.
Link: https://namathulk.com/
