ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

Aarani Editor
1 Min Read
Asian Athletics Championship

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது.

இதன்படி, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தருஷி அபிஷேகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அவர் போட்டி தூரத்தை 2 நிமிடம் 14 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார்.

இதுதவிர ஆடவருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கம் வென்றதுடன் அவர் போட்டி தூரத்தை ஒரு நிமிடம் 53 செக்கன்களில் நிறைவு செய்தார்.
அத்துடன் முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தில்கி நெஹாரா வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான உயரம் பாய்தல் போட்டியில் நெத்யா சம்பத் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *