எமது கட்சியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்கள், கடந்த இரண்டு பிரதான தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர் என அமைச்சர் கூறினார்.
இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவு வழங்கியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தமது கட்சிக்குப் பேராதரவு வழங்குவார்கள் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எமது கட்சியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com/
