உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 1,591 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் 1,406 முறைப்பாடுகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் 185 முறைப்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பொலிஸாரிடம்; இதுவரையில் 170 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முறைப்பாடுகள் 1500ஐ கடந்துள்ளன.
link: https://namathulk.com/
