இம்முறை சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு திரும்புவதற்காக விசேட பஸ் சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் எச் ஜயதிலக தெரிவித்தார்.
தற்போது 24 மணிநேரமும் பஸ் சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி தலதா மாளிகையின் ‘தலதா வழிபாட்டு’ நிகழ்வுக்காக செல்லும் மக்களின் நலன் கருதி விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.
கண்டி-கொழும்பு வீதியில் மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 150 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாகவும், இந்த வருமானம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com/
