மீண்டும் ஒருபோதும் நெல் விலை தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் கூறினார்.
இதன்போது, நெல் களஞ்சியசாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதோடு, அதற்காக 500 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
3 இலட்சம் மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட களஞ்சியசாலைகளை புதுப்பித்துள்ளதாகவும் அஜனாதிபதி கூறினார்.
விவசாயிகள் இனி தங்கள் நெல்லை விற்க முடியாது என்று முறைப்பாடு செய்யத் தேவையில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, விலைகளை நிலைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com/
