2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் 6வது ஆண்டு நிறைவையொட்டி, இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வன்முறையை கடுமையாகக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதல்களை நடத்தியவர்கள் இஸ்லாத்தையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைக்காததையும் இந்த அறிக்கை விமர்சித்துள்ளதோடு, தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து வழக்குத் தொடர அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுவது குறித்தும் இந்த அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com/
