யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா நடைபவணிக்கு பொலிசார் இடையூறு விளைவித்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி நடைபவணி இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் கலைப்பீடம் ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள் கடக்கின்ற நிலையில் அதனை கொண்டாடும் முகமாக ஒன்றாய் எழுவோம் எனும் தொனிப்பொருளில் குறித்த நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக முகவாயிலில் பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில் நடைபவனியை வீதி ஊடாக அனுமதிக்க முடியாது என பொலிசார் தெரிவித்தனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபவனி மேற்கொள்ள தடை என பொலிசார் கூறிய நிலையில் பல்கலைக்கழக முன்வாயிலில், ஆரம்பித்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் குறித்த நடைபவனி இடம் பெற்றது.
Link: https://namathulk.com/
