2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் போது தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த 167 கிறிஸ்தவர்களின் பெயர்கள் வேதசாட்சிகளாக வத்திகானால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் நடந்த குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 167 பேர் வத்திக்கானால் விசுவாச நாயகர்களாகக் கௌரவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்தின் கூறினார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன்று புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற முக்கிய நினைவுச் சேவையின் போது மால்கம் கார்டினல் ரஞ்சித் இதை வெளிப்படுத்தினார்.
Link: https://namathulk.com/
