உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ X தளத்திலேயே அவர் இதனை கூறினார்.
தேர்தலுக்கு முன்பு நிதியை நிறுத்தி வைப்பது குறித்து ஜனாதிபதி சூசகமாக கூறுவது நெறிமுறைக்கு புறம்பானது மட்டுமல்ல, அது அதிகார துஷ்பிரயோகமும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அமைப்பு மாற்றம் என்பது மற்றவர்களுக்குப் போதிக்கும் ஒரு முழக்கம் மட்டுமல்ல எனவும் எதிர்க் கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
Link: https://namathulk.com/
