ஜனாதிபதியின் தமிழ், சிங்கள புத்தாண்டு குறுஞ்செய்தியை அனுப்பாததன் மூலம் அரசாங்கத்தால் 98 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்தார்.
அரசியல் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அத்துடன், இந்த ஆண்டு ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி அனுப்பப்படவில்லை என வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர், இது முந்தைய ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட ஒரு நடைமுறை எனவும் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அனுப்பப்பட்ட குறுஞ் செய்தியை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
புத்தாண்டு செய்திகளை அனுப்ப ஒரு ஜனாதிபதி நியமிக்கப்படவில்லை என கூறிய பாராளுமன்ற உறுபர்பினர், இப்போது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல சரியான தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
Link: https://namathulk.com/
