கண்டியில் நடைபெறும் தலதா வழிப்பாட்டில் கலந்து கொள்ளும் பொதுமக்கள், பொலித்தீன் போன்ற மக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்கவும், தலதா மாளிகை வளாகத்திற்குள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கவும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கையின்படி, நியமிக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே பயன்படுத்தி, கழிவுகளை பொறுப்புடன் அப்புறப்படுத்த பார்வையாளர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் க்ளீன் சிறிலங்கா தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக, புனித தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களிடமிருந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் கழிவு இல்லாத சூழலை உருவாக்குவதிலும் சரியான கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவிப்பதிலும் விசேட கவனம் செலுத்துகிறது.
Link: https://namathulk.com/
